உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை சத்தியமங்கலம், அக். 17- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அருகே நேற்று காலை சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடியை நோக்கி அரசு பஸ், 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. பஸ்சை பார்த்ததும் யானை துரத்த ஆரம்பித்தது. பஸ்சை டிரைவர் பின்னால் சிறிது துாரம் நகர்த்திக்கொண்டே சென்றார். அப்போது யானையை பார்த்ததும் பஸ்சிலிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். 20 நிமிடம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் பஸ் கிளம்பி சென்றது. தாளவாடி அருகே யானை, பஸ்சை வழிமறித்த சம்பவத்தால் அச்சத்துடன் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை