வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி(13) என்ற மாணவி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாதாந்திர தேர்வு எழுதிய நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஆசிரியர்கள் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.