இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு பெருந்துறை எம்.எல்.ஏ., அழைப்பு
பெருந்துறை:பெருந்துறை எம்.எல்.ஏ.,வும், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளருமான ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க., பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலை-வருமான பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்று பயண பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, 4:00 மணியளவில் பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, தாய் நகர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள திடலில் பிரசாரம் மேற்கொள்-கிறார்.அதுசமயம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க., ஒன்றிய, மாவட்ட, கிளை கழகம் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் அலைகடலென திரண்டு வந்து, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொது செய-லாளருமான பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டும். மீண்டும் அவரை தமிழக முதல்வராக, அனைத்து தொண்டர்களும், அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். அனைவரும் இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.