உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகரில், 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு முதலே களை கட்டியது.இதற்காக பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள சி.எஸ்.ஐ., பிரப் தேவாலயத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு 10:30 மணி முதலே குவியத் தொடங்கினர். மேலும் புத்தாண்டை ஒளிபரப்பும் விதமாக, தேவாலயத்தின் முகப்பில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்து. இதையடுத்து நள்ளிரவு 12:00 மணிக்கு எல்.இ.டி., திரையில் உள்ள எண்கள் 2025ல் இருந்து, 2026க்கு மாறியது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் 'ஹேப்பி நியூ இயர்' என உற்சாக முழக்கம் எழுப்பியவாறு புத்தாண்டை வரவேற்றனர். மேலும் வானில் வண்ண பலுான்களை பறக்கவிட்டும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பின்னர், கேக்குகள் வெட்டி பகிர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்.பி., சுஜாதா தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை