மேலும் செய்திகள்
இறந்த நபர் யார்?
09-Apr-2025
சென்னிமலை: சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள புங்கம்பாடி அருகே செல்லும், எல்.பி.பி., வாய்க்காலில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக, புங்கம்பாடி வி.ஏ.ஓ., கனகராஜ், வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இறந்தவருக்கு, 30 வயது இருக்கும் என்றும், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Apr-2025