தமிழில் பெயர் பலகை பவானியில் ஆலோசனை
பவானி:பவானி நகரில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள், தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பவானி நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சிந்துாரி, கவுன்சிலர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். அரசு உத்தரவுப்படி இன்னும் ஒரு வாரத்துக்குள் நகரில் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும், பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என்று, தலைவர் அறிவுறுத்தினார். வியாபாரிகள் சங்கத்தினர் மட்டும், 10 நாட்களுக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க ஆவண செய்கிறோம் என்றனர்.