உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுமுடியில் போராட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுமுடியில் போராட்டம்

கொடுமுடி, டிச. 18-கொடுமுடி, இச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள நார் மில்லை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.கொடுமுடி தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். இச்சிப்பாளையம் கிராம முக்கியஸ்தர்கள் மாதப்பன், மூர்த்தி, அன்பு மணி, சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி, மாவட்ட உதவித்தலைவர் கனகவேல், கொடுமுடி ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், துணைத்தலைவர் சிவலிங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா செயலாளர் சசி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், மக்களுக்கு பாதிப்பையும், காற்று மாசு மற்றும் குடிநீரை கெடுக்கும் நார்மில்லை துவங்க கூடாது. ஆலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.போராட்டத்தில், 140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு வாரத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் இப்பிரச்னை குறித்து பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக, வருவாய்த்துறை துணை தாசில்தார் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை