அ.தி.மு.க., ஆலோசனை பெருந்துறை, ஜூலை 2௯
பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பாக, நிச்சாம்பாளையம் பஞ்.,ல் பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். பூத் கமிட்டி உறுப்பினர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அரசு செய்த சாதனை, தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். விளையாட்டு வீரர்கள் அணிக்கு உறுப்பினர்களை சேர்க்கவும் வலியுறுத்தினார்.கூட்டத்தில் நிச்சாம்பாளையம் பஞ்., முன்னாள் தலைவர் ஆண்டமுத்து, பஞ்., முன்னாள் செயலாளர் சாமிக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.