மேலும் செய்திகள்
ரூ.2 கோடி மோசடி: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
07-Dec-2024
ஈரோடு: பவானி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் டிரைவர் ஏலச்சீட்டு நடத்தி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானி மின்னவேட்டுவம்பாளையம் சாலை கோவில் தோட்டத்தை சேர்ந்த விவசாயி யுவராஜ், 43, தலை-மையில் ஆறு பேர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தனிடம் அளித்த புகார் மனுவில் கூறியி-ருப்பதாவது:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.,வுமாக இருப்பவர் கருப்பணன். இவரிடம், கார் டிரைவராக பணிபுரிந்து வரும், மின்னவேட்டுவம்பாளையத்தை சேர்ந்த தாமரைச்-செல்வன், எங்களிடம், 2021ல் முருகேசன் என்பவருடன் இணைந்து நான்கு மாதத்துக்கு ஒரு முறை ஐந்து லட்சம், 10 லட்-சத்துக்கு சீட்டு நடத்துவதாக கூறினர். சீட்டில், 20 பேர் சேர்ந்து நான்கு மாதத்துக்கு ஒரு முறை சிறிய சீட்டுக்கு, 25 ஆயிரம், பெரிய சீட்டுக்கு, 50 ஆயிரம் செலுத்தினோம்.முதல் சீட்டுக்கான தொகையை தாமரைச்செல்வன் வைத்துக் கொண்டார். 10 ஏலம் முறையாக நடந்தது. தாமரைச்செல்வனை நம்பி சீட்டு போட்டவர்கள், முறையாக பணம் தராததால், ஏலச்-சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் தர முடியவில்லை. இது தொடர்-பாக முருகேசனும், அவரை நம்பி சீட்டு போட்ட நாங்களும் தாம-ரைச்செல்வனிடம் கேட்டபோது, சீட்டு பணம் தர முடியாது. உங்-களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என கூறினார். தாமரைச்செல்வன் சீட்டுக்கு, அவரது அண்ணன் வெங்க-டாசலம் பொறுப்பேற்று மூன்று முறை ஏலம் நடத்தினார்.தாமரைச்செல்வன் பணம் தராததால், அவரும் சீட்டுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விலகி விட்டார். தாமரைச்-செல்வன் குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே ஏலச்சீட்டு நடத்து-வதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்-துள்ளது தெரியவந்தது. எங்களிடமும் சீட்டு நடத்தி, 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து, மிரட்டி வரும் தாமரைச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, தாமரைச்செல்வன் கூறியதாவது: முருகேசனிடம் இருந்து பணம் பெற்றிருந்தேன். அப்போது, எனது காசோலைகளை வழங்-கினேன். முருகேசனுக்கு வட்டியுடன் தொகையை செலுத்தி விட்டேன். அவரிடம் இருந்து காசோலைகளை திரும்ப பெற-வில்லை. காசோலைகளை வைத்து வழக்கு போட்டுள்ளார். காசோலைகளை திருப்பி கொடுத்தால், சீட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன். ஒன்பது ஏலத்துக்கான தொகையை கொடுத்து விட்டேன். இப்பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே கவுந்தப்பாடி போலீஸ் ஸ்டேஷனிலும், வி.ஐ.பி.,களிட மும் பேச்சுவார்த்தை நடந்தது. காசோலையை தருவதாக கூறியவர், தற்போது வழக்கு போட்-டுள்ளார். என்னிடம் உரிய ஆதாரம் இருக்கிறது. கொடுக்க வேண்-டிய ஏலத்தொகை குறைவுதான்.இவ்வாறு கூறினார்.
07-Dec-2024