உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் சிக்கிய முதியவர் பலி

விபத்தில் சிக்கிய முதியவர் பலி

அந்தியூர்: விபத்தில் சிக்கிய முதியவர், பரிதாபமாக இறந்தார்.அத்தாணியை சேர்ந்தவர் சைலேந்திரன், 34. இதே பகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் கேசவன், 62. இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் பல்சர் பைக்கில், அந்தியூர்-அத்தாணி சாலையில் வந்து கொண்டு இருந்த போது, சாலை ஓரமாக நின்றி-ருந்த இன்னொரு பல்சர் பைக்கின் சைலென்சர் மீது மோதியது. நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அருகில் இருந்-தவர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த கேசவன், நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை