கலெக்டர் அலுவலகத்தில் பராமரிப்பில்லாத கழிப்பறை
கலெக்டர் அலுவலகத்தில்பராமரிப்பில்லாத கழிப்பறைகரூர், நவ. 3-கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பராமரிப்பில்லாத நிலையில் உள்ள கழிப்பறைகளால், துர்நாற்றம் வீசுவதால், அலுவலர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம், கூடுதல் கட்டடத்தில் பல்வேறு துறை அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்திலும், தலா இரண்டு வீதம் மொத்தம், 12 கழிப்பறைகள் உள்ளன. ஆழ்துளை கிணறு மூலம் இவற்றுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், கழிப்பறைகள் கடும் துர்நாற்றம் வீசுகின்றன. அலுவலக பணிகளை மேற்கொள்ள முடியவில்லையென, ஊழியர்கள் புலம்புகின்றனர்.கடந்த காலங்களில், தினமும் இரண்டு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வந்து, கழிப்பறைகளை சுத்தம் செய்தனர். தற்போது சுத்தம் செய்ய முறையாக யாரும் வருவதில்லை. அலுவலக வேலை, பயிற்சி முகாம் என, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவர்கள், வேறு வழியின்றி துர்நாற்றம் வீசும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.