உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் வனப்பகுதியை ஒட்டி, ஸ்டார் கிரஷர் கல் குவாரி செயல்பட்டது. சட்ட விரோதமாக செயல்பட்ட இந்த குவாரியில், பாறையை வெடி வைத்து தகர்த்தபோது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளிகள் பலியாகினர். இதை தொடர்ந்து குவாரி உரிமையாளர் தம்பதி உள்பட ஏழு பேரை, பங்களாப்புதுார் போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் குவாரி கம்ப்ரஷர் ஆப்பரேட்டரான டி.என்.பாளையம், ஹாஸ்டல் வீதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி, 39, என்பவரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். குவாரி வெடி விபத்து சம்பவத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியையும் சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ