மேலும் செய்திகள்
வாரச்சந்தை கடைகள் ஏலம்: 2வது முறை ஒத்திவைப்பு
18-Apr-2025
அந்தியூர்அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், வாரச்சந்தை வணிக வளாக கட்டடம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. பேரூராட்சி துணைத் தலைவர் பழனிசாமி, தலைவர் பாண்டியம்மாள் முன்னிலையில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில், வணிக வளாக பகுதியிலுள்ள, 16 கடைகளில், 9 கடைகள் மாதம் தலா, 16,000 ரூபாய் வாடகைக்கு ஏலம் போனது. இதேபோல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஒரு கடை, மாதம் 7,000 ரூபாய்க்கு வாடகைக்கு ஏலம் விடப்பட்டது. செயல் அலுவலர் சதாசிவம் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
18-Apr-2025