உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு : அம்மாபேட்டை அருகே, குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதி, பூதப்பாடி பஞ்.,ல் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு, கோடை கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு மற்றும் ஒழிப்பு முறை, சிகிச்சைக்கான வழிகள், முதலுதவி சிகிச்சை, பாதுகாக்கும் உணவு முறைகள் பற்றி சுகாதார நலக்கல்வி அளிக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரகாசம், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஐசக் ஆகியோர் நலக்கல்வி வழங்கினர். 100 நாள் வேலை திட்டப்பணியாளர்கள், பொதுமக்கள் பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை