லட்டு கிடைக்க வாய்ப்பில்லாததால் அப்பீட்டு? இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத சுயேட்சைகள்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேட்சைகள் ஆர்வம் காட்டவில்லை.ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்-தேர்தல் நடக்கிறது. இரண்டாவது நாளாக நேற்று மனுத்தாக்கல் நடந்தது. அடுத்து வரும், ௧௭ம் தேதி மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும். இதில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள், ௧௦ மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த, 2023ல் நடந்த இடைத்தேர்தலில், முதல் நாளில் மட்-டுமே, 17 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இறுதியாக காங்., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி என, 96 வேட்பா-ளர்கள், 121 மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 38 மனு தள்ளு-படி செய்யப்பட்டு, 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆறு மனு வாபஸ் பெறப்பட்டு, 77 பேர் களத்தில் இருந்தனர். ஆனால் அதே தொகுதியில் இரண்டாவது முறையாக தேர்தல் நடக்கும் நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., போன்ற பிரதான கட்சிகள் புறக்கணித்து விட்டன.இந்நிலையில் வரும், 17ல் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வாய்ப்-புள்ள நிலையில், ஒன்பது சுயேட்சைகள் மட்டுமே மனு செய்துள்-ளனர். இந்த இடைத்தேர்தலில் சுயேட்சைகள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டாதது வியப்பாக உள்ளது.