உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு

பவானியில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு

பவானி : எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையிலான, தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு, சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று பார்வையிட்டனர். பின் பவானி அருகே ஜம்பை கிராமத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் குஞ்சு வளர்ப்பு குளங்களை பார்வையிட்டனர். ஜம்பை பகுதியில், 13.26 கோடி ரூபாய் மதிப்பில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணி, பவானி ஆதி திராவிடர் கல்லுாரி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், பவானி அரசு மருத்துவமனையை பார்வையிட்டு, அங்கு கட்டப்படும் கூடுதல் கட்டட பணியை ஆய்வு செய்தனர்.காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையம், நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்