மேலும் செய்திகள்
ஈசனை தரிசிக்க வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள்
13-May-2025
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல, 1,320 திருப்படிகள் உள்ளன. இதில் மலை உச்சியில் தமிழ் வருடத்தை குறிக்கும் வகையில், 60 படிகள் உள்ளன. இதை, 60-ம் படிகள் என்று பக்தர்கள் வணங்குகின்றனர். இந்த, 60 படிகளுக்கும் விசாக நட்சத்திர தினத்தில் சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடம் சார்பில் பூஜை நடந்து வருகிறது. இந்த தினமான நேற்று, 60- படிகளையும் மஞ்சள் பொடி தீர்த்தம் தெளித்து, விளக்கேற்றி, தேங்காய், பழம் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து, சூடமேற்றி ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.
13-May-2025