வழிப்பறி செய்ய முயன்றவர் கைது
வழிப்பறி செய்யமுயன்றவர் கைதுஅரவக்குறிச்சி, நவ. 3-அரவக்குறிச்சி அருகே, பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி அருகே சின்னம்மநாயக்கனுாரை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி சங்கீதா, 45. இவர் இப்பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.இவர், எட்டியாகவுண்டனுாரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வண்டிக்காரன் தோட்டம் அருகே சென்றபோது, அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ் மகன் மணிகண்டன், 26, என்பவர் சங்கீதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்ய முயன்றுள்ளார்.உஷாரான சங்கீதா சுதாரித்து கொண்டு, அப்பகுதியை சேர்ந்த மக்களை உதவிக்கு அழைத்து மணிகண்டனை கையும் களவுமாக பிடித்துள்ளார்.இது தொடர்பாக, சங்கீதா அளித்த புகார்படி சம்பவ இடத்திற்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார், மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.