தேர்திருவிழா தற்காலிக கடைகளுக்கு ஏலம்
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழாவில், 13 நாட்களுக்கு தற்காலிக கடைகள் நடத்த சுங்கம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான பொது ஏலம் நடந்தது. இதில் கோவையை சேர்ந்த ஒருவர், 74 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு 82.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.