உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் வீசுவதை தவிர்க்க வேண்டும்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் வீசுவதை தவிர்க்க வேண்டும்

புளியம்பட்டி: சுற்றுலா செல்பவர்கள், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பைகள் வீசுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பூங்காவிற்கு செல்லும், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வருபவர்கள், வனப்பகுதி சாலை வழியாகத்தான், பூங்காவுக்கு செல்ல முடியும். அடர்ந்த வனப்பகுதிசாலைகளில் பயணிக்கும் போது, சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்கின்றனர். வாகனங்களில் இருந்து வீசப்படும் உணவுகளுக்காக, வனப்பகுதி சாலையோரமாக குரங்குகள் காத்திருக்கின்றன. அப்போது உணவு பொட்டலங்களை எடுக்க செல்லும் குரங்குகள், வாகனங்களில் மோதி பலியாகின்றன.வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து அனுப்பும் அதிகாரமில்லை. அதற்கான வசதியும் வனத்துறையில் இல்லை. வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது. பாலிதீன் பைகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ