உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு, மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடர்பாக, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை கமிஷனர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார அலுவலர், ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ