உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செக்யூரிட்டிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

செக்யூரிட்டிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு; ஈரோட்டில் மாவட்ட போலீசார் சார்பில் தனியார் பள்ளி செக்யூரிட்டிகள் (காவலாளிகள்) பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளி மாணவ - -மாணவிகள் போக்சோ வழக்-குகளில் சிக்குகின்றனர். பள்ளிக்கு வருவதாக கூறி, பள்ளியில் இருந்து வெளியே செல்கின்-றனர். அவர்களை நமது குழந்தைகளாக பாவித்து, அவர்கள் நடவடிக்கையை சரி செய்யவும், அவர்கள் குறித்து தகவலை தலைமையாசிரியர்-களுக்கு, செக்யூரிட்டிகள் தெரியப்படுத்த வேண்டும்.வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதினால் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு '100' எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். சிங்கப்பெண் அதிரடிப்படைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடை-களின் இரவு செக்யூரிட்டியாக இருப்பவர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும். சில இடங்களில் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளை-ஞர்கள் கும்பலாக சேர்ந்து காவலாளிகளை தாக்கி, கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். சந்தேக நபரை அடையாளம் கண்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதில், 50க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை