உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு

மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் அவசியம் குறித்து, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி நகர திட்டமிடுதல் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். மழை நீரை வீணாக்காமல் வீடுகள் மற்றும் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்து சேகரித்தல், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரித்தல், மழை நீர் உறிஞ்சு குழி அமைத்தல், சாலையோரங்களில் மழை நீர் நிலத்துக்குள் செல்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போன்ற வழிமுறை குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை