கடை, நிறுவனம், வாகன ஸ்டாண்டுகளில் களை கட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்
கடை, நிறுவனம், வாகன ஸ்டாண்டுகளில்களை கட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்ஈரோடு, அக். 12-கடை, நிறுவனம், வாகன ஸ்டாண்டுகளில் ஆயுதபூஜை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை ஒட்டி ஈரோட்டில் நேற்று தொழிற்சாலைகள், ஆட்டோ ஸ்டாண்ட்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடினர். முன்னதாக தொழிற்சாலை, கடைகள், அலுவலகங்கள், வாகனங்களை சுத்தம் செய்தனர். வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, பூக்களால் அலங்கரித்தனர். சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, பழங்கள், வெற்றிலை - பாக்கு வைத்து வழிபட்டனர். பல கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு பாத்திரங்கள், வேட்டி, சேலை, பரிசுப்பொருள், பணம் என ஆயுதபூஜை அன்பளிப்பாக உரிமையாளர்கள் வழங்கினர்.ஆலை வளாகம், ஆட்டோ ஸ்டாண்டுகளில் வண்ண பேப்பர்கள், பூக்களால் அலங்காரம், தோரணம் அமைத்து பூஜித்தனர். ஆட்டோக்கள், தொழிற்சாலை வாகனங்களை பேரணி போல வீதிகளில் ஓட்டிச்சென்று டிரைவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். வாடிக்கையாளர், மக்களுக்கும் பிரசாதம், பொரி வழங்கினர். சில டீக்கடைகள், ேஹாட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு சுண்டல், பொங்கல் வழங்கினர். கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.ஆயுதபூஜைக்கு தேவைப்படும் பொரி, வாழைப்பழம், வாழைக்கன்று, கனி வகைகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் குவிந்தது.