உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் குண்டம் விழா; கடைகள் ரூ.82 லட்சத்துக்கு ஏலம்

பாரியூர் குண்டம் விழா; கடைகள் ரூ.82 லட்சத்துக்கு ஏலம்

கோபி, டிச. 18-பாரியூர், கொண்டத்துக்காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை, 82 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்.கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலின், குண்டம் தேர்த்திருவிழா வரும், 26ல், பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2025 ஜன.,6ல், சந்தனக்காப்பு அலங்காரம், 9ல், பக்தர்கள் பூ மிதிக்கும் குண்டம் திருவிழா, 10ல், திருத்தேரோட்டம், 11ல், மலர்ப்பல்லக்கு உற்சவம், 18ல், மறுபூஜை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஜன.,6 முதல், 18ம் தேதி வரை மொத்தம், 13 நாட்களுக்கு தற்காலிக கடைகள் நடத்த சுங்கம் வசூலிக்கப்படுகிறது.பாரியூர் குண்டம் திருவிழா என்றாலே, டில்லி அப்பளமும், மிளகாய் பஜ்ஜியும் விற்பனை களைகட்டும். அத்தகைய தற்காலிக கடைகளுக்கு, சுங்கம் வசூலிக்கும் உரிமத்துக்கான பொது ஏலம், அறநிலையத்துறை துணை கமிஷனர் மேனகா, ஆய்வாளர் சிவமணி, செயல் அலுவலர் அனிதா ஆகியோர் தலைமையில் நேற்று மதியம் நடந்தது. அப்போது கோபியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர், 82.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு ஏலத்தை காட்டிலும், ஆறு லட்சம் ரூபாய் ஏலத்தொகை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ