உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வரும் 4ல் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஈரோட்டில் வரும் 4ல் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஈரோடு: ஈரோட்டில் வரும் ஞாயிறு அன்று (பிப்.,4) மாபெரும் பரதநாட்டிய அரங்கேற்ற விழா மற்றும் பிரபல திரைப்பட நடிகை ரேணுகா குமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடக்கிறது.ஈரோடு, கலெக்ட்ரேட் அருகில் குமரன் வாட்சஸ், கொங்கு கலையரங்கம், கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்தும், 5 பரத நாட்டிய மாணவிகளின் மாபெரும் அரங்கேற்ற விழா வரும், 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கொங்கு மஹால் கொங்கு கலையரங்கில் நடைபெற உள்ளது.ஐந்து ஆண்டுகளாக முறைப்படி பரதநாட்டியம் கற்று வரும் பரதநாட்டிய கலைஞர் செல்வி மதுமித்ராவின் மாணவிகள் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பங்கேற்கின்றனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை ரேணுகா குமரனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை குமரன் வாட்சஸ் உரிமையாளர்கள் குமாரசாமி, யுவராஜ், விஜயலட்சுமி, கொங்கு கலையரங்கம் தலைவர் டர்மரிக் சின்னசாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஹரிராம்சந்த்ரு, கொங்கு வேலுசாமி, சென்னை ஸ்ரீநிதி மற்றும் கவிதாலயம் ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி