உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை நீர்வரத்து 8,611 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து 8,611 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 1,328 கன அடியாக இருந்த, 8,611 கன அடியாக நேற்று காலை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 99.06 அடி, நீர் இருப்பு 27.9 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில், 1,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை