மேலும் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17-Jul-2025
புன்செய்புளியம்பட்டி, நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த, 2௭ம் தேதி காலை 100 அடியை எட்டியது. இதை தொடர்ந்து அணை பாதுகாப்பு கருதி, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், 3,647 கன அடியாக நேற்று நீர்வரத்து சரிந்தது. அதேசமயம் அணையில் இருந்து, 3,600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பவானிசாகர் அணை நீர்மட்டம் மூன்றாவது நாளாக, 100.04 அடி; நீர் இருப்பு, 28.7 டி.எம்.சி.,யாக இருந்தது.
17-Jul-2025