உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

பவானிசாகர் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

பவானிசாகர்: அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும், தென்மேற்கு பருவமழையால், பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்வரத்து, 9,238 கன அடியாக இருந்த நிலையில், மதியம், 80 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 500 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 150 கன அடி நீர் பவானி ஆற்றில், திறக்கப்படுகிறது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.10 அடி, நீர் இருப்பு, 15.7 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை