தொழிலாளர்களுக்கு பா.ஜ., மரியாதை
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி ரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், ஹிந்து முன்னணி சார்பில் 26ம் ஆண்டாக, சதுர்த்தி விழாவையொட்டி, காசிபாளையம் பா.ஜ., மேற்கு மண்டலம் சார்பில், ரங்கம்பாளையம் விநாயகர் சதுர்த்தி விழா குழு சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி பங்கேற்றார். நிர்வாகிகள், கட்சியினர் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.