உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையை மறித்து அலப்பறை; குடிமகன்களால் மாணவியர் அச்சம்

சாலையை மறித்து அலப்பறை; குடிமகன்களால் மாணவியர் அச்சம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், பவானிசாகர் சாலை வடக்கு காந்திபுரம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு இரண்டு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. கடை எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில், குடிமகன்கள் ஆங்காங்கே அமர்ந்து குடிக்கின்றனர். பின் போதையில் அருவெருப்பாக பேசி, சாலையை மறித்து ரகளையில் ஈடுபடுவதால், பெண்கள், பள்ளி மாணவிகள் பீதியடைகின்றனர். மாலையில் பள்ளி மற்றும் டியூசன் முடிந்து வீடுக்கு செல்லும் மாணவிகள், வேறு பாதையில் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள், பெண்கள் அமைப்பினர் பலகட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை. ரகளையில் ஈடுபடும் குடிமகன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க, வடக்கு காந்திபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ