உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர் உறுப்புகள் தானம்

பெருந்துறைஈரோடு மாவட்டம் சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் மைக்கேல் தேவராஜ், 49; கடந்த, 15ம் தேதி ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகில் டூவீலரில் சென்றபோது, கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது. இதையறிந்த குடும்பத்தினர் உடலுறுப்புகளை, தானம் செய்ய சம்மதித்தனர். கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் ஆப்பரேஷனில் அகற்றப்பட்டன. அரசு மருத்துவமனை சார்பாக மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில், உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த மைக்கேல் தேவராஜுக்கு அனிதா ரோஸ்லின் என்ற மனைவி, 25 வயதில் மகன், 15 வயதில் மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி