ஆயுத பூஜை விடுமுறையால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் வெறிச்
ஆயுத பூஜை விடுமுறையால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் 'வெறிச்'ஈரோடு, அக். 12-ஆயுத பூஜை விடுமுறையால் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.நேற்று சரஸ்வதி பூஜையுடன் ஆயுத பூஜை, இன்று விஜய தசமி, நாளை ஞாயிற்று கிழமை என்பதால் பெரும்பாலான அரசு, தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம், 3 நாட்கள் விடுமுறை விடுத்துள்ளனர். பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை முதல் விடுமுறை விடுக்கப்பட்டது. இதனால், விடுதி மாணவ, மாணவியர் அன்றே சொந்த ஊர் சென்று விட்டனர்.அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் சொந்த ஊர் திரும்பினர். இதனால் நேற்று பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஈரோடு பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், சாய, சலவை, தோல் ஆலைகள், ஜவுளி சார்ந்த பிற நிறுவனங்களும் விடுமுறை விடுக்கப்பட்டதால், பஜார் பகுதியிலும் வழக்கமான கூட்டம் இல்லை. கார், வேன், பஸ்களில் சுற்றுலா மற்றும் வெளியூர் செல்வோர் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், பெரிய சில ேஹாட்டல்கள் தவிர, சிறிய, நடுத்தர ேஹாட்டல்கள், சாலை ஓர உணவு விடுதிகள் இயங்காததால், உணவுக்கு மக்கள் சிரமப்பட்டனர்.