உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவியுடன் தகராறு வியாபாரி விபரீத முடிவு

மனைவியுடன் தகராறு வியாபாரி விபரீத முடிவு

ஈரோடு, ஈரோடு, வீரப்பன் சத்திரம், மல்லிகை நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 34, வியாபாரி. இவரின் மனைவி பட்டுராணி. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதால் சரிவர வியாபாரத்துக்கு செல்வதில்லை. இது தொடர்பாக தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மாடியில் உள்ள அறைக்கு துாங்க சென்ற கணவரை, நேற்று முன்தினம் காலை எழுப்ப மனைவி சென்றார். அப்போது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ