உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய அரசின் கல்வி உதவி மாணவர்களுக்கு அழைப்பு

மத்திய அரசின் கல்வி உதவி மாணவர்களுக்கு அழைப்பு

ஈரோடு:மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்துகிறது.நடப்பு, 2026-27 ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் பள்ளிகளில் நடப்பாண்டில், 9 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், https://scholarships.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 75,000 ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். 30 சதவீத மாணவியர் பயன் பெறுவர். மாணவர்களின் விண்ணப்பம் வரும், 30க்குள்ளும், கல்வி நிறுவனங்களின் விண்ணப்பத்தை, டிச.,15க்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை