மேலும் செய்திகள்
உரிமை கோராத தொகை நாளை முதல் முகாம்
14-Oct-2025
ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 'உங்கள் பணம் உங்கள் உரிமை திட்ட முகாம்' கலெக்டர் கந்தசாமி தலைமையில் துவக்கப்பட்டது.வங்கியில், 10 ஆண்டுக்கு மேலாக உரிமை கோராத வாடிக்கையாளர்களின் டிபாசிட் தொகை, இன்சூரன்ஸ் தொகை, மியூச்சுவர் பண்ட் தொகை திரும்ப பெறும் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை முகாம் நடந்தது. டிச., இறுதி வரை இம்முகாம் அனைத்து வங்கி, இன்சூரன்ஸ் அலுவலகங்களில் நடக்கும்.வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கை, 10 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்தால், இன்சூரன்ஸ் தொகையை, 7 ஆண்டுக்கு மேல் பெறாமல் இருந்தால் அத்தொகை ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்ட தொகை உரிய நபர்களிடம் அல்லது உரியவர் இறந்து இருந்தால், அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும் நோக்கில் இம்முகாம் நடக்கிறது, என தெரிவித்தனர்.முகாமில், 72 வாடிக்கையாளர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் அளவிலான தொகை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் சரவணன், ஐ.ஓ.பி., சென்னை உதவி பொது மேலாளர் கண்ணன், வங்கி அதிகாரிகள் திருமுருகன், சுசீலா, சாயிக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Oct-2025