இடியும் நிலையில் வாய்க்கால் தொட்டி பாலம்
ஈரோடு: ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில், மாரியம்மன் கோவிலை ஒட்டி காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த இடத்தில் பெரும்பள்ளம் ஓடையை கடந்து காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் செல்ல தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் அமைக்கும் போது கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ்பகுதி தற்போது சிதிலம-டைந்து, காரை பெயர்ந்து, கற்கள் தெரிகின்றன. மூன்று போக விளைச்சலுக்கு தண்ணீர் செல்லும் நிலையில் பாலம் இடிந்து விடும் நிலையில் உள்ளது. அடுத்த தண்ணீர் நிறுத்த காலத்தில் பாலத்தை சீரமைத்து, காலிங்கராயன் வாய்க்கால் நீர் தடையின்றி, கடைமடை பகுதிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க, பாசன விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---