உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி

கோபி: கவுந்தப்பாடி அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதியதில், வயதான தம்பதியர் பலியாகினர்.ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் நாராயணன், 70; விவசாயியான இவரின் மனைவி ராதாமணி, 63. மனைவியுடன் சுசுகி ஆக்சஸ் மொபட்டில், கவுந்தப்பாடி அருகே செம்பூத்தாம்பாளையம் பிரிவு என்ற இடத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு சென்றார். கோபி, சிங்கிரிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 56, ஓட்டி வந்த 'டாடா ஏஸ்' சரக்கு ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்த தம்பதியர், சம்பவ இடத்தில் பலியாகினர்.கவுந்தப்பாடி போலீசார் இருவரின் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உறவினரின் துக்க நிகழ்வுக்கு பங்கேற்க சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை