| ADDED : செப் 18, 2026 06:48 AM
பவானி:பவானியை
அடுத்த ஜம்பை பஸ் நிறுத்தம் அருகில், மின் கம்பம் இருந்தது. இரு
தினங்களுக்கு முன் காற்றுடன் பெய்த மழையால் முறிந்து விழுந்தது. இதனால்
அப்பகுதியில் இரண்டு நாளாக மின் வினியோகம் தடைபட்டு மக்கள்
சிரமப்பட்டனர். புது மின் கம்பம் அமைத்து மின் வினியோகத்துக்கான
நடவடிக்கையில் மின்வாரிய துறையினர் மெத்தனம் காட்டினர். இதனால்
ஆத்திரமடைந்த மக்கள், பவானி - ஆப்பக்கூடல் சாலையில் நேற்று மறியலில்
ஈடுபட்டனர். பவானி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சாரம்
கிடைக்கும் வரை மறியலில் ஈடுபடுவோம் என்று மக்கள் கூறியதால், மின்
வாரிய அதிகாரிகளை போலீசார் வரவழைத்தனர். அவர்கள் ஆய்வில் கரும்பு
தோட்டத்தில் மினம் கம்பிகள் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. கரும்புகளை
வெட்டி அகற்றும் பணியை தொடங்கினர். இப்பணி முடிந்தவுடன் மின் கம்பம்
அமைக்கப்படுவதாக கூறவே, மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீண்டும் மறியல்இதனிடையே
கரும்புகளை வெட்டி அகற்றிவிட்டு, மின் கம்பம் அமைக்கும் பணியில்
மின்வாரியத்துறையினர் சுணக்கம் காட்டியதால், மாலை, 4:20 மணிக்கு
மக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வந்த
அதிகாரிகள் பணியை தொடங்கினர். வேலையை முடித்து மின் வினியோகம் கிடைத்த
பிறகே இரவு, 7:20 மணிக்கு மக்கள் மறியலை கைவிட்டனர்.