உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதல் நேரம் பிரசாரம் செய்ததாக சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு

கூடுதல் நேரம் பிரசாரம் செய்ததாக சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு

ஈரோடு: அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் தேர்தல் பிர-சாரம் செய்ததாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு, பவானி சாலை நெரிகல் மேட்டில் நேற்று முன்தினம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது கூட்டத்தில் பேசினார். இந்நி-லையில் மாலை, 5:30 முதல் 6:30 மணி வரை பிரசாரத்துக்கு அனு-மதி கேட்டு இருந்தனர். ஆனால், 6:15 முதல் இரவு, 9:15 மணி வரை பிரசாரம் செய்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதி-முறையை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர், ஈரோடு கருங்-கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.இதன்படி, சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர், 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை