உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

தீயணைப்பு துறை சார்பில் காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகை

தீயணைப்பு துறை சார்பில்காவிரி ஆற்றில் விழிப்புணர்வு- ஒத்திகைஈரோடு, அக். 4-வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், ஈரோட்டில் காவிரி ஆற்றில் வெள்ளத்தின் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகசேன் தலைமை வகித்தார். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தத்ரூவமாக செய்து காண்பித்தனர்.குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால், காலி வாட்டர் பாட்டில், தேங்காய் மட்டை, வாகன டயர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக தப்பிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறையில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.இதேபோல் கொடுமுடியில் காவிரிக்கரை, அந்தியூர் தீயணைப்பு துறை சார்பில் அத்தாணியில் பவானி ஆற்றில், பவானி தீயணைப்பு நிலையம் சார்பில், காடையாம்பட்டி ஏரியிலும், தீயணைப்பு துறையினர், மக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ