மேலும் செய்திகள்
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது!
09-Nov-2025
காங்கேயம், காங்கேயம் டவுன் பகுதியில், போலீசார் சார்பில், காங்கேயம் போலீஸ் ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திருப்பூர், சென்னிமலை, ஈரோடு, தாராபுரம், முத்துார் ரோடுகளில், ௧50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஃதற்போது இதில் பெரும்பாலான கேமராக்கள் பழுதாகி விட்டன. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது குற்றச்சம்பவங்களை துப்பு துலக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கேமராக்களை, முறையாக பராமரிக்காமல், போலீசார் மெத்தனம் காட்டுவது ஆச்சர்யமாக உள்ளது. போலீசாரின் இந்த மெத்தனம், குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிட்டது. நகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் முறையாக பராமரிப்பதுடன், அவ்வப்போது பழுதுகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
09-Nov-2025