உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உறுதியானது சிறுத்தை நடமாட்டம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

உறுதியானது சிறுத்தை நடமாட்டம்; மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

டி.என்.பாளையம் : டி.என்.பாளையத்தகை அடுத்த பெருமுகை ஊராட்சி பகுதியில், கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடத்தில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கு மக்கள் தகவல் தந்தனர்.இதை தொடர்ந்து அந்தியூர் வனத்துறையினர், கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடங்களில் ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தையின் கால் தடம் சிக்கியது. எனவே, சஞ்சீவிராயன் குளம், அதன் நீர் வழித்தட பகுதிகளில், வனத்தை ஒட்டி குடியிருக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம். நாய் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைக்குமாறும், மக்களை எச்சரித்துள்ளனர். மேலும், காலை நேரங்களில் கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் வரையிலான நீர் வழித்தடங்களில் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் எனவும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் உறுதியானதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை