மின் கணக்கீட்டில் மாற்றம்
ஈரோடு, ஈரோடு நகரியம் கோட்டம், நாராயணவலசு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, 014 எண் உள்ள வெட்டுக்காட்டுவலசு பகிர்மான பகுதி மின் இணைப்புகளில், இதுவரை ஒற்றை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டது. நிர்வாக காரணத்துக்காக ஆறாவது மாதம் முதல், இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும். இதன்படி வெட்டுக்காட்டுவலசு மடியார் காலனி - 1, 2, 3, வெட்டுக்காட்டுவலசு ஊர் பகுதி போஸ்டல் நகர், அருமை கார தோட்டம், சைவ மாரியம்மன் கோவில் பகுதி, தேசாங்காடு, முருகேசன் நகர், கணபதி நகர் 6 வது வீதி பகுதிகளில் இரட்டை படை மாதங்களில் கணக்கீடு நடக்கும்.