உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு

பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலர் பாரதி, துணை தலைவர் செல்வராஜ், இணை செயலர் சக்திவேல் உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது: கணித மேதை ராமானுஜம் பிறந்த பகுதியான ஈரோடு, கோட்டை, தெப்பக்குளம் வீதிக்கு, ஏழு ஆண்டுக்கு முன் 'கணித மேதை ராமானுஜம் வீதி' என பெயர் மாற்றி அர-சாணை பிறக்கப்பட்டது. ஆனாலும் அரசு ஆவணங்கள், மாநக-ராட்சி ரசீது, அரசு கடிதங்களில் மாற்றப்பட்ட பெயரை பயன்ப-டுத்தாமல், தெப்பக்குளம் வீதி என்றே குறிப்பிடுகின்றனர்.அதுபோல பிரப் சாலை மீனாட்சிசுந்தரனார் சாலை என்றும், சம்பத் நகர் சாலையில் ஒரு பகுதி திருப்பூர் குமரன் சாலை என்றும், கச்சேரி வீதியில் ஒரு பகுதி திருமகன் ஈவெரா சாலை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாலை என பெயர் மாற்றி, அர-சாணை வெளியிடப்பட்டது. தற்போதைய வாக்காளர் பட்டி-யலில் கூட இன்னும் பழைய பெயரில்தான் அச்சிட்டுள்ளனர். புதிய பெயரில் மாற்றி அச்சிட்டும், பயன்படுத்தியும் நடைமு-றைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்