உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு /  சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி

 சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி

ஈரோடு: ஈரோட்டில் குமலன்குட்டை அருகில் ரிலையன்ஸ் மால் உள்ளது. இங்கு முதல் தளத்தில், 'மெர்ரி பெர்ரி' என்ற பிரபல உணவு நிறுவனம் செயல்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடியை சேர்ந்த பாலமுருகன் மனைவி கோகுலசெல்வி, 37, அவரது மகன், மகள் நேற்று அங்கு சென்றனர். சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினர். அந்த பர்கரில், ஆறு கட்டுக்கம்பிகள் இருந்தன. தகவல் அறிந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர் அந்த உணவு பொருளை ஆய்வு செய்து, கட்டுக்கம்பி இருந்ததை உறுதி செய்து, கடையை மூடும்படி உத்தரவிட்டனர். தொடர்ந்து கடை மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்