உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிதம்பர ரகசியமாக நடக்கும் புளியம்பட்டி நகராட்சி கூட்டம்

சிதம்பர ரகசியமாக நடக்கும் புளியம்பட்டி நகராட்சி கூட்டம்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் சிதம்பரம், கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் வழக்கம் போல் செலவு கணக்குகளுக்கு அனுமதி வழங்கி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.நகர்மன்ற கூட்டம் நடப்பது குறித்து, நகராட்சி சார்பில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். சமீப காலமாக தகவல் தராமல் நடக்கிறது. நேற்றும் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், தாமாக அறிந்து செய்தியாளர்கள் செல்வதற்குள் கூட்டம் முடிந்து விட்டது. பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், சிதம்பர ரகசியம் போல் புளியம்பட்டி நகர்மன்ற கூட்டம் நடப்பதாக, முன்னாள் கவுன்சிலர்கள் சாடியுள்ளனர்.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் கூறுகையில், ''நகராட்சி தலைவரால் நகர்மன்ற கூட்டம் கூட்டப்படுகிறது. அவர்தான் தகவல் தெரிவிப்பார். இதற்கு முன் நான் பணியாற்றிய நகராட்சி அலுவலக கூட்டங்களுக்கு, செய்தியாளர்களை அழைத்ததில்லை. இனிமேலும் அழைக்க மாட்டேன்,'' என்றார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரிடம் கேட்டபோது, 'புன்செய்புளியம்பட்டி கமிஷனரிடம் விசாரிக்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை