உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் பாலாலய நிகழ்வில் தலைமை நீதிபதி பங்கேற்பு

கோவிலில் பாலாலய நிகழ்வில் தலைமை நீதிபதி பங்கேற்பு

தாராபுரம்: தாராபுரம், கோட்டைமேட்டு தெருவில் உள்ள, கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவிலில் பாலாலய பூஜை நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தாராபுரம் பகுதியை சேர்ந்தவரும், மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியுமான கிருஷ்ணகுமார், மனைவி பத்மாவதியுடன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி