உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் துவக்கம்

ஈரோடு, ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குமாரவலசு, கவுண்டிச்சிபாளையம், கூரப்பாளையம், பிச்சாண்டம்பாளையம், கதிரம்பட்டி பஞ்.,களில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து பேசினார்.ம்மாவட்டத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட, 10 முகாம்களில் மக்களிடம், 2,356 கோரிக்கை மனு பெறப்பட்டு, 870 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முழு தகவல் அளிக்காததால், 935 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 551 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.அதேபோல தற்போது பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை