உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரிச்சேரியில் சித்திரை திருவிழா

ஒரிச்சேரியில் சித்திரை திருவிழா

பவானி:பவானி அருகே ஒரிச்சேரியில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம், 22ல் துவங்கியது. பின், பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்து, 29ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி முடிந்தவுடன், அன்றே கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், ஒரிச்சேரி பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பொங்கல் வைத்தல், அம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஒரிச்சேரி, ஒரிச்சேரிப்புதுார், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி